தமிழ்நாடு

tamil nadu

ரஷ்யா, செர்பியாவை இணைத்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி

By

Published : Jun 4, 2021, 7:10 PM IST

Updated : Jun 5, 2021, 7:19 AM IST

ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி செர்பியாவில் இன்று ( ஜூன் 4 ) தொடங்கும் என அந்நாட்டின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான அமைச்சர் நேனாட் போபோவிச் தெரிவித்துள்ளார்.

Sputnik Vaccine to be produced in Serbia
ரஷ்யா, செர்பியாவை இணைத்த ஸ்புட்னிக் தடுப்பூசி

பெல்கிரேட்:ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியை செர்பியாவில் ரஷ்யா தொடங்கவுள்ளது. இதுதொடர்பாக செர்பியா நாட்டின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான அமைச்சர் நேனாட் போபோவிச் ட்வீட் செய்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், "செர்பியாவில் டொர்லாக் நிறுவனத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் தயாரிப்பு ஜூன்4 இல் தொடங்குகிறது. செர்பியா, ரஷ்யாவின் உயர் அலுவலர்கள் இந்த உற்பத்தியை தொடங்கி வைக்கின்றனர். கரோனா போரில் வெற்றிபெறுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

செர்பியாவில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கியதற்கு ரஷ்ய அதிபர் புதினுக்கு, அந்நாட்டின் அதிபர் அலேக்சாண்டர் வோவிச் நன்றி தெரிவித்துள்ளார். இன்று செர்பிய நாட்டு மக்களிடையே பேசிய அவர், " இன்று ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியை தொடங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்தநிகழ்வில், ரஷ்ய அதிபர் புதினும், நானும் காணொலி வாயிலாக இணைகிறோம். தடுப்பூசி உற்பத்தி இந்தப்பிராந்தியத்தில் கரோனாவை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு உதவும். கூடிய விரைவில், தடுப்பூசி உற்பத்தி நிலையத்தை செர்பியாவில் கட்டமைக்கவுள்ளோம்" என்றார்.

கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதினும், செர்பியாவின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான அமைச்சர் அலேக்சாண்டர் வோவிச்சும் செர்பியாவில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவது குறித்துப் பேசியிருந்தனர். தற்போது, செர்பிய மக்கள் பைசர், சினோ ஃபார்ம், ஆஸ்ட்ரோஜென், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.

செர்பியாவுக்கான ரஷ்யாவின் தூதர் , 85 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பெற விரும்புவதாக தெரிவித்திருந்தார். சோவியத் யூனியனின் பிளவுக்கு பின் இருநாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'விளைநிலத்தில் திடீர் ராட்சத பள்ளம்' - மேலும் விரிவடைவதால் பொதுமக்கள் அச்சம்

Last Updated : Jun 5, 2021, 7:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details