தமிழ்நாடு

tamil nadu

இலங்கை - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

By

Published : Feb 24, 2021, 10:24 PM IST

இஸ்லாமாபாத்: இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 5 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கை பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

pakistan
இம்ரான்கான்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக நேற்று இலங்கைக்கு சென்றார். அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவையும் சந்தித்து முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.

இந்தச் சந்திப்பின் போது சுற்றுலாத்துறை வளர்ச்சி உள்பட ஐந்து முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளிலும் புதிய அரசாங்கங்கள் அமைக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகியவற்றில் இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

இதுமட்டுமின்றி, இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் பாதுகாப்பு கடன் வரி வசதிக்காக வழங்குவதாக இம்ரான் கான் அறிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்தல், உளவுத்துறை பிரிவு போன்ற விஷயங்களைத் திறம்படக் கையாளுவதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஒரு வலுவான கூட்டு முயற்சி தேவை என்பதையும் இரு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கத் தொடர்ந்து அளித்த ஆதரவுக்குப் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இலங்கை பிரதமர் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அதிகரிக்கும் தற்கொலைகள்: பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜப்பானில் தனி அமைச்சகம்!

ABOUT THE AUTHOR

...view details