தமிழ்நாடு

tamil nadu

பாகிஸ்தானிலும் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு

By

Published : Nov 5, 2021, 7:07 PM IST

பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Pakistan hikes petroleum
Pakistan hikes petroleum

பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்தி பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டின் நிதியமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் விலையை ரூ.8.03, டீசல் விலையை ரூ.8.14 உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கெரோசின் விலையை ரூ.6.27, மிதமான டீசல் விலையை ரூ.5.72 உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இம்ரான் கானின் இந்த முடிவுக்கு அந்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்நாட்டின் தெரிக்-இ-லப்பைக் என்ற அமைப்பு பெரும் போராட்டத்தை நடத்தியதன் காரணமாக கடந்த வாரம் பாகிஸ்தானில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

அந்நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக வெகுஜன மக்கள் தவித்துவரும் நிலையில், பாமர மக்களுக்காக அடிப்படை பொருள்களை மானியத்தில் வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான நிதி இழப்பை சரிக்கட்டவே பாகிஸ்தான் அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு அறிவிப்பை அமல்படுத்தவில்லை என்றால் நாடு பெரும் நெருக்கடியில் சிக்கிவிடும் என பிரதமர் இம்ரான் கான் மக்களிடம் முறையிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கோவிட்-19: தடுப்பூசி போட மறுக்கும் அமெரிக்க உளவுத்துறை அலுவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details