தமிழ்நாடு

tamil nadu

ஆப்கனை விட்டு வெளியேறிய குத்துச்சண்டை வீராங்கனை

By

Published : Sep 12, 2021, 7:39 PM IST

தாலிபான் கொலை மிரட்டல் விடுத்த காரணத்தால் குத்துச்சண்டை வீராங்கனை சீமா ரேசாய் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்.

Female Afghan boxer
Female Afghan boxer

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் குத்துச்சண்டை வீராங்கனை சீமா ரேசாய் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். 16 வயதிலிருந்து குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றுவரும் இவர், தாலிபான் மிரட்டல் காரணமாக இம்முடிவை எடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் புதிதாக ஆட்சியமைத்துள்ள தாலிபான் அங்கு இஸ்லாமிய ஷரியத் சட்டப்படியே ஆட்சி நடத்தும் எனக் கூறியுள்ளது. அங்கு பெண்கள் விளையாடுவதற்கு அனுமதி வழங்க மறுத்துவருகிறது.

குத்துச்சண்டை வீராங்கனையான சீமா ரேசாய் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டுவந்த நிலையில், அவருக்கு தாலிபான் பகீரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், "நான் எனது பயிற்சியாளர் உதவியுடன் பயிற்சியில் ஈடுபட்டுவந்தேன்.

அப்போது அங்கு வந்த தாலிபான் ஒரு ஆணுடன் பெண் பயிற்சியில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினர். மேலும், நான் பயிற்சியை நிறுத்தாவிட்டால் கொலை செய்யப்படுவேன் என மிரட்டல் விடுத்தனர்" என்றார்.

தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ள சீமா ரேசாய் கத்தாரில் உள்ளார். அமெரிக்காவில் பயிற்சியை தொடர அந்நாட்டு விசாவுக்கு முயற்சி செய்கிறார் சீமா ரேசாய்.

இதையும் படிங்க:102 நிமிடத்தில் சிதைந்த 3,000 கனவுகள் - நினைவுகூரும் பைடன்!

ABOUT THE AUTHOR

...view details