தமிழ்நாடு

tamil nadu

கொரோனா அச்சம்: தன்னைத் தானே பூட்டிக்கொண்ட சீன இளைஞர்

By

Published : Mar 5, 2020, 11:39 AM IST

நொய்டா: கொரோனா வைரஸ் தாக்கியிருக்குமோ என்ற அச்சத்தில் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தன்னைத் தானே வீட்டில் பூட்டிக்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா அருகே வசித்து வரும் சீன நபர் ஒருவர், நேற்றிரவு தன்னைத் தானே வீட்டிற்குள் வைத்து பூட்டிக்கொண்டார்.

பிரபல சீன செல்ஃபோன் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்ரி வரும் இவர், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்ககூடும் என்று அச்சமடைந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அவர், தான் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து தன்னைத் தானே பூட்டிக்கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், அப்பகுதியின் தலைமை மருத்துவர் அனுராக் பார்கவா தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், சீன இளைஞர் வசிக்கும் குடியிருப்புக்கு விரைந்த மருத்துவக் குழுவினர், அந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொண்டதில், அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று உறுதிசெய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: விமான நிலையத்தில் கூடுதல் மருத்துவர்கள் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details