தமிழ்நாடு

tamil nadu

இந்தோனேஷியா அருகே 94 ரோஹிங்கியா இன மக்கள் மீட்பு

By

Published : Jun 25, 2020, 8:36 AM IST

ஜகார்த்தா: இந்தோனேஷியா அருகே இந்தியப் பெருங்கடலில் பாழடைந்த கப்பல் ஒன்றில் உணவு, தண்ணீரின்றி தவித்துவந்த 96 ரோஹிங்கியா இன மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

rohinya
rohinya

இது குறித்து பேசிய இந்தோனேஷிய காவல் துறை உயர் அலுவலர் முகமது ஜமில், "ஆச்சே மாகாணம் அருகே இந்தியப் பெருங்கடலில் பாழடைந்த படகு ஒன்றில் 49 பெண்கள், 30 குழந்தைகள், 15 ஆண்கள் என 94 ரோஹிங்கியா இன மக்கள் தவித்துவந்ததை மூன்று மீனவர்கள் கண்டுள்ளனர்.

மீனவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளியெழுந்த அவர்கள் தங்களைக் காப்பாற்றுமாறு கூறி, மீனவர்கள் சென்ற மீன்பிடிப் படகில் ஏறியுள்ளனர். ஆனால், அந்த மீன்பிடிப் படகின் இன்ஜின் செயலிழந்ததால் படகு கரைக்கு வர முடியாமல் போனது.

இதையடுத்து, எங்களுக்கு (காவல் துறை) அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு சென்று நாங்கள் அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்தோம். கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடைகளைத் தானமாகக் கொடுத்தனர்.

இவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கு சென்றுகொண்டிருந்தார்கள் எனத் தெரியவில்லை. நாங்கள் பேசியது அவர்களுக்குப் புரியவில்லை. அவர்களால் மலாயோ, ஆங்கிலமோ பேச முடியவில்லை.

இரண்டு வாரங்களாகச் சரியான உணவு, தண்ணீரின்றி மெலிந்து காணப்பட்டனர். அவர்களை எங்கு அனுப்ப வேண்டும் என்பதை அரசுதான் முடிவுசெய்யும்" என்றார்.

முன்னதாக, ஏப்ரல் மாதம் படகு மூலம் மலேசியா அடைந்த 200 ரோஹிங்கியா இன மக்களை அந்நாட்டுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கரோனா பெருந்தொற்றே இதற்குக் காரணம் என மலேசிய அலுவலர்கள் கூறினர்.

இதையும் படிங்க : தென்கொரியா மீது உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்த வடகொரியா திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details