தமிழ்நாடு

tamil nadu

'ஒரே ஆண்டில் 37 மில்லியன்' - ஃபோர்ப்ஸில் முதலிடம் பிடித்த பிரபல டென்னிஸ் ஸ்டார்!

By

Published : May 23, 2020, 1:59 PM IST

வாஷிங்டன்: உலகளவில் பெண் விளையாட்டு வீராங்கனைகளில் அதிக சம்பளம் வாங்குவதில் ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

ஒசாகா
ஒசாகா

அமெரிக்காவின் பிரபல இதழ் ஃபோர்ப்ஸ், கடந்த ஆண்டில் அதிக பணம் சம்பாதித்த 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா 29ஆவது இடத்திலும், பெண் விளையாட்டு வீராங்கனைகளில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

கடந்த 12 மாதத்தில் 37.4 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தைப் பரிசுகள் வழியாகவும், ஒப்பந்தங்கள் வழியாகவும் ஒசாகா சம்பாதித்துள்ளார். இவர் செரீனா வில்லியம்ஸை விட 1.4 மில்லியன் டாலர் அதிகமாகப் பெற்றுள்ளாதால், 33ஆவது இடத்திற்கு செரீனா தள்ளப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக 2015இல், மரியா ஷரபோவா 29.7 மில்லியன் டாலரை ஒரு ஆண்டில் சம்பாதித்ததுதான் சாதனையாக இருந்தது.

ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா

1990ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ச்சியாக ஃபோர்ப்ஸ் இதழ், பெண்கள் விளையாட்டு வீரர்களின் வருமானத்தைக் கண்காணிக்கிறது. அதில், ஒவ்வொரு ஆண்டும் டென்னிஸ் வீரர்கள்தான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நெருக்கடி நிலையிலும் உலக பில்லியனர்கள் பட்டியலில் டாப்பில் இருக்கும் முகேஷ் அம்பானி!

ABOUT THE AUTHOR

...view details