தமிழ்நாடு

tamil nadu

'காலநிலை நெருக்கடிக்கு ஒருங்கிணைந்த பதில் தேவை' - ஜோ பைடன்

By

Published : Jan 28, 2021, 11:55 AM IST

வாஷிங்டன்: காலநிலை நெருக்கடியை சரிசெய்வதற்கு ஒருங்கிணைந்த பதில் தேவைப்படுகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்
வாஷிங்டன்

சூற்றுச்சழலை பாதுகாக்கும் நோக்கில் புதிதாக எண்ணெய், எரிவாயு குத்தகைகள் விடுவதை நிறுத்தும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "காலநிலை நெருக்கடிக்கு ஒருங்கிணைந்த பதில் தேவைப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். பொது நிலங்கள், கடல் நீர்நிலைகளில் புதிதாக எண்ணெய் மற்றும் எரிவாயு குத்தகைகளை வழங்குவதை நிறுத்த உள்துறை செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் நிறுவனங்களுக்கான புதைபடிவ எரிபொருள் மானியங்களை அகற்றுமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் எனத் தெரிவித்தார்.

ஜோ பைடனின் புதிய உத்தரவுக்கு எதிராக, வெஸ்டன் எனர்ஜி கூட்டணி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. அதில், "பொது நிலங்களில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குத்தகைக்கு விடுவதை அமெரிக்க அதிபர் பைடன் ரத்து செய்தது, அதிகாரத்தை மீறிய செயலாகும். மூன்று சட்டங்களை அவர் அவமதித்துள்ளார்" எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details