தமிழ்நாடு

tamil nadu

2 தோல்விகளுக்குப் பின் எலான் மஸ்க் கண்ட வெற்றி!

By

Published : Mar 4, 2021, 3:29 PM IST

Updated : Mar 4, 2021, 3:34 PM IST

வாஷிங்டன்: இரண்டு சோதனை முயற்சிகளுக்குப் பிறகு ஸ்பேஸ்எக்ஸ் எஸ்என் ரக ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.

SpaceX
ஸ்பேஸ் எக்ஸ்

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட செவ்வாய்க்குச் செல்லும் ஸ்டார்ஷிப் ராக்கெட் ரகங்கள் சோதனையிடப்பட்டுவருகின்றன. முன்மாதிரி ஹெவி-லிப்ட் ராக்கெட் வகைகளான எஸ்என் 8, எஸ்என் 9, எஸ்என் 10 விண்கலன்களை தனது கனவுத் திட்டத்திற்காக அவர் உருவாக்கினார். அதில் முதல் இரண்டு விண்கலன்கள் சோதனை முயற்சியின்போது வெடித்துச் சிதறின.

இந்நிலையில், நேற்று (மார்ச் 3) மூன்றாவதாக உருவாக்கப்பட்ட எஸ்என்10 விண்கலம் டெக்சாஸில் உள்ள போகா சிக்கா ராக்கெட் ஏவுதளத்தில் சோதனையிடப்பட்டது. இந்தச் சோதனையில் எஸ்என்10 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட பின், தரையிறக்கப்பட்டது.

ஆனால், அடுத்த ஆறு நிமிடங்களில் அது வெடித்துச் சிதறியது. சுமார் 10 ஆயிரம் கி.மீ. உயரம் பறந்து மீண்டும் வெற்றிகரமாகத் தரையிறங்கிய இந்த விண்கலம், இரண்டு தோல்விகளுக்குப் பிறகு எலான் மஸ்க்கின் கனவுத் திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

இதையும் படிங்க:ஸ்பேஸ் எக்ஸின் 'ஹெவி-லிப்ட் ராக்கெட்' வெடித்து சிதறியது!

Last Updated : Mar 4, 2021, 3:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details