தமிழ்நாடு

tamil nadu

நியூயார்க்கில் ஊரடங்கின் மத்தியில் துப்பாக்கிச்சூடு

By

Published : Jun 4, 2020, 4:49 PM IST

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் முற்றி இருதரப்பினரும் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நியூயார்க்கில் ஊரடங்கின் மத்தியில் துப்பாக்கிச்சூடு
நியூயார்க்கில் ஊரடங்கின் மத்தியில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் எனும் பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில், போராட்டக்காரர் ஒருவர் காவல்துறையினரால் சுடப்பட்டார்.

மேலும் இதில் இரண்டு காவலர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவலர் ஒருவரின் அடக்குமுறையால் உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், அந்நகரின் மேயர் பில் டி ப்ளாசியோ காயமடைந்த காவலர்களை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

நியூயார்க்கில் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல்

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதியில், காவல் துறையினரின் அராஜகத்தை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவருகின்றன. முன்னதாக காவல் துறையினரின் வாகனம் அவ்விடத்தில் எரிக்கப்பட்டது.

ஆனால், நேற்று இரவு துப்பாக்கி சூடு நடைபெறுவதற்கு முன்னதாக அப்பகுதியில் எவ்வித கலவரமும் நடைபெறவில்லை என்றும், துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகே காவல் துறையினரின் வாகனங்கள் அங்கு குவிக்கப்படதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க :அமெரிக்காவில் துப்பாக்கிகளை ஏந்திச் செல்லும் போராட்டக்காரர்கள்

ABOUT THE AUTHOR

...view details