தமிழ்நாடு

tamil nadu

அரசியல் விளம்பரங்களுக்கு கூகுள் தடை

By

Published : Jan 14, 2021, 7:13 PM IST

Updated : Jan 15, 2021, 7:06 AM IST

வாஷிங்டன்: ஜோ பைடன் பதவியேற்பு விழாவையோட்டி, வன்முறையை தடுத்திய இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

வாஷிங்டன்
வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜோ பைடனுக்கு உறுதி சான்றிதழ் வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அப்போது, நாடாளுமன்றத்தில் கூடிய ட்ரம்ப் ஆதரவாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 5 பேர் உயிரிழந்தனர். நாடாளுமன்றம் சூறையாடப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்போராட்டத்திற்கு பின்னால் ட்ரம்ப் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அவரது சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், இந்தப் போராட்டத்திற்கு அமெரிக்க தேர்தல் தொடர்பான தகவல்கள், விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவியதுதான் காரணம் என கருதப்பட்டது.

இந்நிலையில், ஜோ பைடன் வரும் ஜன- 20ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.

கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜோ பைடன் பதவியேற்பு, நாடாளுமன்ற வன்முறை, ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யும் நடைமுறைகள் தொடர்பான அரசியல் ரீதியிலான விளம்பரங்களை இன்று முதல் வரும் 21ஆம் தேதிவரை வெளியிட தடை விதிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Last Updated : Jan 15, 2021, 7:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details