தமிழ்நாடு

tamil nadu

‘அவளுடன் நானும் இறந்து விட்டேன்’ - விஜய் ஆண்டனி உருக்கமான பதிவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 9:49 PM IST

விஜய் ஆண்டனியின் மகள் உயிரிழந்த நிலையில், “மீரா என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள், அவளுடன் நானும் இறந்து விட்டேன்” என விஜய் ஆண்டணி உருக்கமான பதிவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ் திரையுலகின் நடிகரும், முன்னணி இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சமீபத்தில் தற்கொலை செய்து உயிரிழந்தார். இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திரையுலகம் மட்டுமின்றி விஜய் ஆண்டனியின் ரசிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மீராவின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், விஜய் ஆண்டனி இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன் முதலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது உலகத்தை விட்டு சாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்றிருக்கிறாள். அவள் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்.

அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்கான நேரத்தை ஒதுக்க ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்” என உருக்கமான கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.

இதனைக் கண்ட விஜய் ஆண்டணியின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதலும், தைரியமும் தெரிவித்து வருகின்றனர். மேலும், உங்களது எண்ணங்கள் நல்லபடியாக நடைபெறும் எனவும், அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்பதாகவும் விஜய் ஆண்டனிக்கு நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:Vijay Antony daughter died: விஜய் ஆண்டனியின் மகள் மீரா நல்லடக்கம்! இறுதி நொடிகள்!

ABOUT THE AUTHOR

...view details