தமிழ்நாடு

tamil nadu

Jailer: தலைவர் படம்னா ஜாக்பாட் தான்... ஜெயிலர் பட வசூல் இவ்வளவா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 10:40 AM IST

Jailer Movie Collection: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 16 நாட்களான நிலையில், 600 கோடி ரூபாய் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளதாக படக்குழு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயிலர்
Jailer

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி என ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

ஜெயிலர் திரைப்படம் வெளியான முதலே ரசிகர்களிடயே பிரமாண்ட வரவேற்ப்பு பெற்று வருகிறது. வழக்கம் போல நெல்சனின் காமெடி கலந்த ஆக்‌ஷன் ஜானரில் வெளியான இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நல்ல வரவேறப்பு கிடைத்த இப்படம் வசூல் வேட்டையில் பட்டையை கிளப்பி வருகிறது.

இதையும் படிங்க:திரையரங்குகளில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?

தமிழ்நாட்டில் ஜெயிலர் திரைப்படம் முதல் நாள் வசூல் 25 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 11 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 11 கோடியே 5 லட்ச ரூபாயும், பிற மொழிகளில் 3 கோடி ரூபாயும் ஈட்டியது. வெளிநாடுகளில் மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் என உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

இந்நிலையில், இத்திரைப்படம் வெளியாகி 16 நாட்கள் ஆன நிலையில், தற்போது உலகம் முழுவதும் 600 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை படைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 350 கோடி ரூபாய் வரை வசூல் ஆகி உள்ளதாக படக்குழு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வெற்றி படமாக ஓடி வருவதால் படக் குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.

மேலும், ஜெயிலர் படத்தை அடுத்து ஜெய்பீம் படம் இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்திற்கான பூஜை கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்றது. ஜெய்பீம் பேன்றே இப்படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

லைக்கா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அதுமட்டுமின்றி அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:“ரஜினிகாந்த் 170” படத்தின் பூஜை ஆரம்பம்...உற்சாக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details