தமிழ்நாடு

tamil nadu

சூர்யா 43; தீ குரலில் உருவாகும் முதல் பாடல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 7:48 PM IST

GV Prakash's song for Suriya 43: சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 43 படத்திற்கான, பாடல் பதிவை தொடங்கி இருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

GV Prakash's song for Suriya 43
GV Prakash's song for Suriya 43

சென்னை:இயக்குநர் சுதா கொங்கரா தமிழில் இறுதிச் சுற்று, சூரரைப் போற்று, துரோகி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.‌ இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதாக கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் நடிகர் சூர்யா, துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

2டி நிறுவனம் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில் இப்படம் உருவாகிறது. இது ஜி.வி.பிரகாஷுக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா தனது 42வது படமாக சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சூர்யா இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இது அவரது 43வது படம் ஆகும். இந்த படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. படத்தின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அறிமுக வீடியோவின் இறுதியில் புறநானூறு என்று எழுதப்பட்டிருந்தது.

மேலும் துப்பாக்கி, சிகப்பு துணி, நெருப்பு, புரட்சி இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில், ஆழமான கதைக்களம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 'சூர்யா 43' படத்தின் பாடல் ரெக்கார்டிங் தொடங்கியுள்ளதாகவும், முதல் ரெக்கார்டிங் வெற்றிகரமான பாடகி 'தீ'யுடன் தொடங்கி இருப்பதாகவும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மீண்டும் இணையும் பகத் பாசில் - வடிவேலு கூட்டணி.. வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details