தமிழ்நாடு

tamil nadu

அஜித்தை இயக்கும் மார்க் ஆண்டனி பட இயக்குநர் - அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 2:17 PM IST

Ajithkumar joins with Mark Antony Director? அஜித்தின் அடுத்த படத்தை மார்க் ஆண்டனி திரைப்பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாகவும், அந்த படத்திற்கு அஜித்திற்கு ரூ.163 கோடி சம்பளம் வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ajith
அஜித்

சென்னை: தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர், ஆதிக் ரவிச்சந்திரன். சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம், மார்க் ஆண்டனி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.

இந்நிலையில், அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன், தான் மிகப்பெரிய அஜித் ரசிகர் என்று பல பேட்டிகளில் தெரிவித்து உள்ளார்.‌ அதுமட்டுமின்றி, நேர்கொண்ட பார்வை படத்திலும் பணியாற்றி உள்ளார்.

அப்போது அஜித்திற்கு அவர் சொன்ன கதை பிடித்து விட்டதாகவும், அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் கதையில்தான் அஜித் நடிக்கப் போகிறார் என்றும், முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு ரூ.163 கோடி சம்பளம் அஜித்திற்கு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து அஜித் தரப்பிலோ அல்லது ஆதிக் ரவிச்சந்திரன் தரப்பில் இருந்தோ படம் இயக்கப் போவதாகவும், சம்பளம் குறித்தும் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் தற்போது லைகா நிறுவன தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஐமேக்ஸ் திரையரங்குகளில் ரிலீஸாகும் லியோ!

ABOUT THE AUTHOR

...view details