தமிழ்நாடு

tamil nadu

வணங்கான் திரைப்படம் … சூர்யாவை விலகச் சொன்ன பாலா!!

By

Published : Dec 5, 2022, 7:20 AM IST

நடிகர் சூர்யாவுக்கு வணங்கான் திரைப்படத்தின் கதை உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் ஏற்பட்டதால் வணங்கான் படத்திலிருந்து சூர்யாவை விலகச் சொன்னதாக இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

வணங்கான் கதை சூர்யாவுக்கு பொருத்தமாக இருக்காது
வணங்கான் கதை சூர்யாவுக்கு பொருத்தமாக இருக்காது

நந்தா, பிதாமகன் ஆகிய படங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த திரைப்படம் ‘வணங்கான்’. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்தது. இதன் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் பாலா வணங்கான் படத்திலிருந்து சூர்யாவை விலகச் சொன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

'நந்தா'வில் நான் பார்த்த சூர்யா, 'பிதாமகன்’இல் நீங்கள் பார்த்த சூர்யா போல், வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி 'வணங்கான்' படப்பணிகள் தொடரும்…"

இந்நிலையில் இயக்குனர் பாலா உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து வணங்கான் படத்திலிருந்து விலகிக்கொள்கிறோம் என 2டி நிறுவனம் ட்விட்டர் பக்கம் மூலம் பாலாவின் அறிக்கைக்கு சூர்யா பதிலளித்துள்ளார்.

எதையும் படிங்க:'தீ.. தளபதி...' வெளியானது வாரிசு படத்தின் 2ஆவது பாடல்

ABOUT THE AUTHOR

...view details