தமிழ்நாடு

tamil nadu

'தாய்க்கிழவி' பாடல்: ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த DNA கூட்டணி!

By

Published : Jun 22, 2022, 7:23 PM IST

தனுஷ் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்து, அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

'தாய் கிழவி’ பாடல் : ஏழு வருடங்களுக்குப் பிறகு ஒன்று சேரும் DNA கூட்டணி..!
'தாய் கிழவி’ பாடல் : ஏழு வருடங்களுக்குப் பிறகு ஒன்று சேரும் DNA கூட்டணி..!

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப்படத்தின் ஒவ்வோரு அப்டேட்களும் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தற்போது அந்தப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை அறிவிக்கும் காணொலி ஒன்று அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் சினிமாவில் வலம் வரும் ட்ரெண்டையே கையிலெடுத்து அறிவிப்பு காணொலியை நகைச்சுவையாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்தக் காணொலியில் இசையமைப்பாளர் அனிருத், நடன இயக்குநர் சதீஷ், மற்றும் வில்லன் நடிகர் பொன்னம்பலம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இந்தப்பாடலை நடிகர் தனுஷே எழுதியுள்ளார். இதன் மூலம் ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் ஒலிக்க காத்திருக்கிறது DnA காம்போ. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்தக் காணொலியை சமூக வலைதளங்களில் சேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். இந்தத் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ''கேமரா ஆங்கிள்ல நம்ம ஆள யாரும் மிஞ்ச முடியாது..!'' - பிரதமரை கலாய்த்த பிரகாஷ்ராஜ்

ABOUT THE AUTHOR

...view details