தமிழ்நாடு

tamil nadu

பிரமிக்க வைக்கும் கங்குவா கிளிம்ஸ் - சூர்யா ரசிகர்கள் உற்சாகம்!

By

Published : Jul 23, 2023, 10:57 AM IST

நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான ‘கங்குவா’ படத்தின் புரோமோ டீசரை படக்குழு சூர்யாவின் பிறந்தநாளை இன்று வெளியிட்டு உள்ளனர்.

பிரமிக்க வைக்கும் கங்குவா கிளிம்ஸ்
பிரமிக்க வைக்கும் கங்குவா கிளிம்ஸ்

சென்னை: ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து வம்சி-பிரமோத் வழங்கும் இயக்குநர் சிவா இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யா நடிப்பில் 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டமான படமான ‘கங்குவா’ படத்தின் பிரமாண்டமான கிளிம்ப்ஸை படக்குழு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டு உள்ளனர்.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம், கங்குவா. இப்படம் இந்திய சினிமாவில் 2023ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தில் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இந்தப் படம் குறித்தான அறிவிப்பு, மோஷன் போஸ்டர், வீடியோ என இவை அனைத்தும் படம் மீதான எதிர்பார்ப்பை சூர்யா ரசிகர்களிடையே அதிகரித்தது.

கங்குவா என்பதன் பொருள் நெருப்பின் சக்தி மற்றும் வலிமையுள்ள வீரன் என்பது ஆகும். இந்த படம் பத்து மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் உருவாவதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும், அனைத்து மாநில மக்களையும் கனெக்ட் செய்யும் வகையிலான தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் படமாக இப்படம் உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கிட்டத்தட்ட 10 மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது.

ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படம், அனைத்து தரப்பினரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது. மேலும், இப்படத்தில் சூர்யா பல்வேறு விதமான தோற்றத்தில் நடிக்கிறார்.

இதன் மோஷன் வீடியோவில் அரந்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என பெயர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்துக்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இதன் இந்தி வெளியீட்டு உரிமை 100 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி சாதனை படைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான இன்று படத்தின் புரோமோ டீசரை வெளியிடுவதில் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புரோமோ டீசர் வெளியாகியுள்ளது. மேலும் நான்கு மொழிகளில் விரைவில் டீசர் வெளியாக உள்ளது. ‘கங்குவா’வின் உலகம் வீரம் மிக்கதாகவும் பார்வையாளர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தையும் தர உள்ளது. மனித உணர்வுகள், திறமையான நடிப்பு மற்றும் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய அளவிலான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் மையமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமிக்க வைக்கும் காட்சிகள், காவியத்துவமான இசை, என இவை எல்லாவற்றையும் விட சூர்யாவின் சக்தி வாய்ந்த மற்றும் கவர்ச்சியான திரை இருப்பு கொண்ட 2 நிமிட கிளிம்ப்ஸ் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. இந்த பான் இந்தியத் திரைப்படமான ‘கங்குவா’வின் உருவாக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு பார்வையாளர்களுக்கு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் 3டியிலும் உருவாகி வருகிறது.

2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட ஸ்டுடியோ கிரீன் சிறந்த விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நடிகர் சூர்யா ரசிகர்களின் உற்சாகத்தினை மேலும் அதிகப்படுத்தும் வகையில் படம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர். இந்த படத்தின் டீசர் வீடியோ வெளியாகி மிகப் பெரிய வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மணிப்பூர் விவகாரம்: தமிழ் நடிகர்களை காட்டமாக சாடிய இயக்குநர் அமீர்!

ABOUT THE AUTHOR

...view details