தமிழ்நாடு

tamil nadu

வெளியானது சன்னி லியோன் தமிழ்ப்பட  போஸ்டர்!

By

Published : Apr 6, 2022, 8:30 PM IST

Updated : Apr 7, 2022, 9:32 AM IST

நடிகை சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கும் முதல் தமிழ் படமான ’ஓ மை கோஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.

சன்னி லியோனின்  தமிழ்பட  ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின்  போஸ்டர் வெளியானது!
சன்னி லியோனின் தமிழ்பட ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் போஸ்டர் வெளியானது!

அமெரிக்க மாடலும் நடிகையுமான சன்னி லியோன் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வலம் வருகிறார், இவர் இந்தியில் பல பாடல்களில் நடித்துள்ளார். இதற்கு முன் தமிழில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலில் வந்திருந்தார்.

இதனையடுத்து சன்னி முதல் முறையாக கதாநாயகியாக தமிழ் படம் ஒன்றில் நடித்து வந்தார். இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை ஆர் யுவன் இயக்குகிறார்.

படத்தில் சன்னி லியோனுடன் நடிகர் சதீஷ், யோகி பாபு, ஜி.பி முத்து மற்றும் நடிகை தர்சா குப்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். முன்னதாக படபிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைபடங்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து உள்ளது.

வெளியான போஸ்டரில் சன்னி லியோன் மம்மி போன்றதொரு லுக்கில் உள்ளார். மேலும் இது ஒரு த்ரில்லர் படமாக இருக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த போஸ்டரை தமிழ் திரை பிரபலங்கள் விஜய்சேதுபதி, இயக்குநர் வெங்கட்பிரபு ஆகியோர் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் கூடிய விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:இயக்குநர் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை - நடிகர் பிரசாந்த் சார்பில் வழங்கல்!

Last Updated :Apr 7, 2022, 9:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details