தமிழ்நாடு

tamil nadu

25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப்படைத்த 'சீதா ராமம்'!

By

Published : Aug 9, 2022, 5:59 PM IST

துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிய 'சீதா ராமம்' திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே 25 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

Etv Bharat25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த 'சீதா ராமம்'!
Etv Bharat25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த 'சீதா ராமம்'!

துல்கர் சல்மான் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவாகி, கடந்த வாரம் வெளியான 'சீதா ராமம்' உலகம் முழுவதும் 25 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த காவிய காதல் கதையான 'சீதா ராமம்', உலகம் முழுவதும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று வருகிறது. படம் வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் ஏறுமுகத்தில் தொடங்கியது. முதல் நாள் வசூலை விட, இரண்டாம் நாள் வசூல் அதிகம்.

மேலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 7) எதிர்பாராத வகையிலான வசூலை 'சீதா ராமம்' பெற்றுள்ளது. இதுவரை 'சீதா ராமம்' உலகம் முழுவதும் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக திரையுலக வணிகர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பல பகுதிகளில் 'சீதா ராமம்' கூடுதல் திரையரங்குகளில் வெளியானது. வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மட்டுமல்லாமல் சிறுநகரங்களில் இருக்கும் ஒற்றைத்திரையரங்குகளிலும் 'சீதா ராமம்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 8) முன்பதிவுகள் படத்தின் வெற்றியை உறுதி செய்திருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்தத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக வசூலிக்கும் என திரை உலக வணிகர்கள் கணித்துள்ளனர். மேலும் 'சீதா ராமம்' திரைப்படம், அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் எட்டு விடுமுறை நாட்கள் இருப்பதால், பார்வையாளர்கள் பெரிதளவில் இப்படத்தினை கொண்டாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப்படைத்த 'சீதா ராமம்'!

அமெரிக்காவில் அமோக வெற்றி:இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் இந்தப்படம் பலத்த வரவேற்பைப்பெற்று வருகிறது. திங்கட்கிழமை அன்று நடைபெற்ற முன் பதிவு விற்பனையுடன் 600 ஆயிரம் அமெரிக்க டாலர்களைக்கடந்துள்ளது. அமெரிக்காவில் வார இறுதி வசூல், 'சீதா ராமம்' படத்திற்கு கிடைக்கும் என்றும், இந்தப் படத்தில் சிறந்த நடிப்பு, சிறந்த காதல் கதை இருப்பதால் விரைவில் ஒரு மில்லியன் டாலர் கிடைக்கும் என்றும் திரையுலக வணிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப்படைத்த 'சீதா ராமம்'!

காவிய காதல் கதையான 'சீதா ராமம்' கதையைப் பார்வையாளர்களும், விமர்சகர்களும் எல்லையற்ற வகையில் காதலித்து வருகின்றனர். போரின் பின்னணியில் நடைபெறும் உணர்வுப்பூர்வமான காதல் கதை என்பதால், பார்வையாளர்களுக்குத் தனித்துவமான அனுபவத்தை அளித்து வருகிறது.

திரையில் மாயாஜாலம் நிகழ்த்தும் காதல் ஜோடிகளான துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் தனித்துவமான நடிப்பு மற்றும் இயக்குநர் ஹனுராகவபுடியின் பிரத்யேகமான எழுத்து மற்றும் இயக்கம். விஷால் சந்திரசேகரின் மயக்கும் இசை, பிஎஸ் வினோத்தின் பிரமிக்கத்தக்க ஒளிப்பதிவு, ஸ்வப்னா சினிமா - வைஜெயந்தி மூவிஸ் போன்ற முன்னணி படத்தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீடு உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

இதையும் படிங்க:சந்தோஷ் நாராயணன் இன்றி வெளியான பா.ரஞ்சித்தின் முதல் பாடல்!

ABOUT THE AUTHOR

...view details