தமிழ்நாடு

tamil nadu

''அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம்'' - 25 நாட்களைக் கடந்த "பத்து தல"!

By

Published : Apr 23, 2023, 2:50 PM IST

சிம்பு நடித்த "பத்து தல" (pathu thala) திரைப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்துள்ளது. இதனை சிம்பு ரசிகர்கள் ஆராவாரமாக கொண்டாடிவருகின்றனர்.

pathu thala movie
பத்து தல

சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான "வெந்து தணிந்தது காடு" ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கி இருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்தது. அதனைத்தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் "பத்து தல" (pathu thala)என்ற படத்தில் சிம்பு நடித்திருந்தார். இப்படம் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ரீமேக்காகும்.

இப்படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்‌. சிம்புவின் இந்த படத்துக்கும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசை அமைத்திருந்தார். இப்படம் கடந்த மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியானது. இதில் சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து இருந்தாலும்‌, சிம்பு ரசிகர்கள் இதனை சிம்பு படமாகவே பார்த்தனர்.

இப்படத்தில் இயக்குநர் கிருஷ்ணாவும், சிம்புவுக்கு அருமையான மாஸ் காட்சிகளை வைத்திருந்தார்கள். இதனால் சிம்பு ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரிதும் கொண்டாடப்பட்டது. சிம்பு நடித்த படத்திலேயே சிறந்த ஓபனிங் கொடுத்த படமாக "பத்து தல" அமைந்தது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இப்படம் வெளியாகி தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று பத்து தல திரைப்படம் 25 நாட்களைக் கடந்துள்ளது. தற்போதைய சூழலில் ஒரு படம் 25 நாட்களை கடந்து ஓடிவருவது சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அந்த நிலையில் பத்து தல திரைப்படம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் இதனை ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஷால் - ஹரி காம்போ: மீண்டும் இணைந்த ஆக்ஷன் கூட்டணி!

ABOUT THE AUTHOR

...view details