தமிழ்நாடு

tamil nadu

நடிகர் பிரபாசின் சலார் டிரெய்லர் டிசம்பரில் வெளியீடு?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 11:05 AM IST

Updated : Nov 6, 2023, 1:17 PM IST

Saalar Movie Trailer Realease Date : நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் டிரெய்லர் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் தொடக்கத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

salaar movie poster
salaar movie poster

ஹைதராபாத்:பாகுபலிக்கு பின்னர் பெரிய அளவில் ஹிட் படம் கொடுக்காத நடிகர் பிரபாஸ், சலார் படத்தை பெரிதும் நம்பி உள்ளார். இந்த படத்தை கே.ஜி.எப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். அண்மையில் நடிகர் பிரபாசின் பிறந்த நாளை முன்னிடு சலார் படத்தின் அப்டேட் வெளியானது.

பயங்கர பொருட் செலவில் தயாராகி வரும் சலார் படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். மேலும் பிருத்விராஜ், ஜெகபதி பாபு வில்லன்களாக நடிக்கின்றனர். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் ஹாலிவுட் படத்திற்கு இணையாக இத்திரைப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜீப்புகள், லாரிகள் என 750 வாகனங்கள் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் இந்த படத்தை தயாரிக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் சலார் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

வருகிற டிசம்பர் 22ஆம் சலார் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரீ-சூட் காரணமாக டிசம்பர் மாதம் தள்ளி போனது. நவம்பர் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் சலார் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு தரப்பில் தகவல் கசிந்து உள்ளது.

இதையும் படிங்க:காதலனை கரம் பிடித்த அமலா பால்… வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

Last Updated :Nov 6, 2023, 1:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details