தமிழ்நாடு

tamil nadu

ஆர்ஜே பாலாஜியின் “ரன் பேபி ரன்” ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

By

Published : Mar 7, 2023, 5:30 PM IST

ஆர்ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்த ரன் பேபி ரன் திரைப்படம் வரும் 10ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர் ஜே பாலாஜியின் “ரன் பேபி ரன்” ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஆர் ஜே பாலாஜியின் “ரன் பேபி ரன்” ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் ஆர்ஜே பாலாஜி ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்து, பின்னர் சினிமாவில் நகைச்சுவை நடிகராக சில படங்களில் நடித்தார். அதனைத்தொடர்ந்து எல்கேஜி என்ற‌ படத்தில் கதாநாயகனாக நடித்தார். காமெடி கலந்து எடுக்கப்பட்ட அப்படம் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து முதன்முறையாக மூக்குத்தி அம்மன் என்ற படத்திற்கு இணை இயக்குநராகப் பணியாற்றினார்.

இப்படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வீட்ல விஷேசம் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தையும் சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கி இருந்தார். இப்படம் ஆயுஷ்மான் குரானா நடித்த பதாய் ஹோ என்ற இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

இந்த ஆண்டு ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ரன் பேபி ரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. த்ரில்லர் படமாக இதில் ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில் உருவான இப்படத்தில், இஷா தல்வார், ராதிகா சரத்குமார், ஜோ மல்லூரி, ஹரீஷ் பெராடி, ஸ்ம்ருதி வெங்கட், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, KPY பாலா, ஜார்ஜ் மரியன், நாகிநீடு முதலிய முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

புலனாய்வு திரில்லராக உருவாகும் இப்படத்தில் சோஃபி என்ற மருத்துவக்கல்லூரி மாணவியின் மரணத்திலிருந்து கதை தொடங்குகிறது. அது நடந்த சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு மருத்துவக் கல்லூரி மாணவி தாரா உயிருக்குப் பயந்து தப்பி ஓடுகிறார். தப்பி ஓடும் வழியில் தாரா, ஒரு காரின் பின் இருக்கையில் தஞ்சம் அடைகிறாள்.

அந்தக் காரை வைத்திருக்கும் சத்யா ஆரம்பத்தில் தாராவிற்கு உதவ மறுத்துவிட்டாலும், பின்னர் அவளை அவனது வீட்டில் இரண்டு மணி நேரம் தங்க அனுமதிக்கிறான். தாரா யார், அவள் உயிருக்கு என்ன ஆபத்து, சத்யாவைத் தாரா சந்திக்கும் நிகழ்வு, அவனது வாழ்க்கையை எப்படி மாற்றப்போகிறது அதற்குப் பின் என்ன நடக்கிறது என்பதுதான் 'ரன் பேபி ரன்'.

'ரன் பேபி ரன்' படத்திற்கு S யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மண் குமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் வரும் 10ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படப்பிடிப்பு தொடங்கியது!

ABOUT THE AUTHOR

...view details