தமிழ்நாடு

tamil nadu

இளைஞர்கள் சினிமாவில் நேரம் செலவழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை - ஆர்.ஜே. பாலாஜி

By

Published : Jan 20, 2023, 10:11 AM IST

சென்னையில் ரன் பேபி ரன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.

இளைஞர்கள் சினிமாவில் நேரம் செலவழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை
இளைஞர்கள் சினிமாவில் நேரம் செலவழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’ரன் பேபி ரன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா தி நகரில் உள்ள ஜிஆர்டி ஹோட்டலில் நேற்று (ஜனவரி 19) நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழரசன், விவேக் பிரசன்னா, தயாரிப்பாளர் லக்ஷ்மணன், இயக்குநர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், "முதல் முறையாக ஆர்.ஜே. பாலாஜியுடன் நடித்துள்ளேன்.

ஆர்.ஜே. பாலாஜி நல்ல மனிதர். நண்பராக நிறைய அறிவுரைகள் வழங்கி உள்ளார். பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்கில் படம் வெளியாக உள்ளது. என்னுடன் படத்தில் இணைந்து வேலை செய்த அனைவருக்கும் நன்றி. நல்ல படத்தை பார்க்க வேண்டும் என்று மக்கள் வருகின்றனர். குறிப்பாக தயாரிப்பாளர்களுக்கு வருமானம் தர வேண்டும். நிறைய கதைகள் கேட்கிறேன். அதில் எனக்கு பிடித்ததை தான் தேர்வு செய்து நடிக்கிறேன் என்று கூறினார்.

இயக்குநர் கிருஷ்ணகுமார் பேசுகையில், நான் இங்கு வரும் போது ரொம்ப பயமாக இருந்தது. மலையாளத்தில் நான் 4 படம் இயக்கி எனக்கு தமிழில் படம் பண்ணுவது புது அனுபவமாக உள்ளது என்றார். நடிகர் ஆர்.ஜே. பாலாஜி பேசுகையில், நான் யார் கிட்டயும் உதவி இயக்குநராக வேலை செய்தது இல்லை. நல்ல இயக்குநர்கள் உடன் வேலை செய்யலாம் என்று நினைத்தேன். நான் ஒரு படம் பண்ணும் போது அந்த படத்தில் மட்டும் தான் கவனம் இருக்கும்.

இளைஞர்கள் சினிமாவில் நேரம் செலவழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை

சிரித்து கொண்டே இயக்குநர் வேலை வாங்கி விட்டார். அந்த ஏழு நாட்கள் பாக்யராஜின் மறு பிறவி தான் இயக்குநர் கிருஷ்ணகுமார். நான் எப்போதும் என்னுடைய குழுவை பற்றி சொல்லுவேன். ஆனால், நான் பொறாமைப்படும் அளவுக்கு ஒரு குழு இயக்குநர் வைத்துள்ளார். என்னுடைய சிகை அலங்காரம் மற்றும் மேக்கப் உள்ளிட்ட கலைஞர்களுக்கு நான் தான் பணம் கொடுப்பேன். அது என்னுடைய பழக்கம். ஆனால், தயாரிப்பாளர் என்னை கொடுக்க விடவில்லை. அந்த அளவிற்கு ஒவ்வொருவரையும் பார்த்து கொண்டார்.

இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனால், இப்படம் இப்போதே லாபகரமான படமாகி விட்டது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், தற்போதைய காலகட்டத்தில் படம் எடுப்பவர்களை தவிர நிறைய இளைஞர்கள் இதில் நிறைய அக்கறை காட்டுகின்றனர். சமீபத்தில் கூட எந்த படம் எவ்வளவு வசூல் செய்தது. முதல் நாள் வசூல், எவ்வளவு ப்ரேக் செய்தது. அமெரிக்காவில் எவ்வளவு, பிரான்ஸ் நாட்டில் எவ்வளவு என நிறைய இளைஞர்கள் தற்போது பேசி வருகின்றனர். இதனால் இளைஞர்களின் ஆற்றல், நேரம் எல்லாம் வீணாகிறது.


அதை கோடி கோடியாக சம்பளம் வாங்கி நடிக்கும் நடிகர்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நிறைய இளைஞர்கள் இதில் நேரம் செலவழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு இளைஞரின் உயிர் பறிபோய் உள்ளது. வரும் காலங்களில் ஒரு எந்திரம் பத்து பேரின் வேலையை பறிக்கப்போகிறது. அப்போது வேலைவாய்ப்பு இல்லாமல் போகும். அப்போது ஒரு இளைஞரின் நேரமும் ஆற்றலும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது. அதனை ஒரு சினிமாவுக்காக வீணடிக்காதீர்கள்.

சினிமாவுக்கு மக்கள் நிறைய கொடுக்கிறார்கள். எங்களுக்கு பேர், புகழ் எல்லாம் கொடுப்பது மக்கள் தான். ஒவ்வொரு படத்தையும் எழுதும் போது நான் மக்களை நினைத்து தான் எழுதுகிறேன். விஜய்க்கு நான் கதை சொல்லி இருந்தேன் அவர் உடனடியாக படம் பண்ணலாமா என்று கேட்டார். நான் இல்லை ஒரு ஆண்டு தேவை என்றேன்.

ஆனால், அவருக்கு அந்த நேரம் இல்லை. நான் ஒரு படம் எடுத்தால் அதற்கு முழு கவனம் செலுத்துவேன். அதனால் என்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். இரண்டு நடிகர்களின் படங்கள் ஒன்றாக வரும் புதிதல்ல. இது உலகம் முழுவதும் நடக்கும். தியாகராஜ பாகவதர், எம் ஜி ஆர் காலத்தில் இருந்து இருக்கிறது இது புதிது கிடையாது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொய் கணக்கு காட்டும் தயாரிப்பாளர்கள்.. துணிவு இயக்குநர் நச்..

ABOUT THE AUTHOR

...view details