தமிழ்நாடு

tamil nadu

ரெட் ஜெயன்ட் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது - கே.பாக்யராஜ்

By

Published : Nov 9, 2022, 5:05 PM IST

ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் பெயரை பலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர் என இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

கே.பாக்யராஜ்
கே.பாக்யராஜ்

கோமலி வழங்க ஆர்.ஆர். கிரியேட்டிவ் கமர்ஷியல் நிறுவனம் சார்பில் கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ''என்னை மாற்றும் காதலே" திரைப்படத்தை என்.சந்திரமோகன் ரெட்டி தயாரித்துள்ளார்.

புதுமுகங்கள் விஷ்வ கார்த்திகேயா, கிருத்திகா சீனிவாஸ் ஜோடியுடன் அலி, துளசி, ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஜார்ஜ் மரியன், லொள்ளுசபா சாமிநாதன், டேனியல் வாசுதேவன், கிருஷ்ணவேணி, நாராயணராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

வசனத்தை சதீஷ் எழுத, பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ்செல்வன் இருவருடன் இணைந்து ஒரு பாடல் எழுதியுள்ள ரதன் படத்திற்கு இசையமைத்துள்ளார். கல்யாண் பி. ஒளிப்பதிவையும், எஸ்.ஜெ.சிவகிரண் படத்தொகுப்பையும், கோபி.பி. நடன பயிற்சியையும், ஹசரத்பாபு, சீனிவாசராஜு இருவரும் தயாரிப்பு மேற்பார்வையையும், நபா சண்டை பயிற்சியையும், சந்திரமெளலி கலையையும் கவனித்துள்ளனர்.

என்னை மாற்றும் காதலே திரைப்படத்தில் ஒரு காட்சி

திரைக்கதை அமைத்து ஜலபதி.பி இயக்கி உள்ளார். திருப்பதி, புத்தூர், பள்ளிப்பட்டு, கேரளா, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுள்ளது. இதன் விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது, 'தற்போது அதிகமாக பேசப்படும் பெயர் ரெட் ஜெயன்ட். நிறைய படங்களை அவர்கள் தான் வெளியிடுகின்றனர். ரெட் ஜெயன்ட் என்ற பெயரை பலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

நிறைய படங்கள் அவர்கள் ரிலீஸ் செய்து வெற்றி அடைந்துள்ளது. பல படங்கள் நல்ல கலெக்ஷன் பெற்றுள்ளது. லவ் டுடே படத்தைக் கூட அவர்கள் தான் ரிலீஸ் செய்தனர். பெரிய நிறுவனம் கூட தங்களுடைய படங்களை ரெட் ஜெயன்ட் ரிலீஸ் செய்ய வேண்டும் என கேட்கின்றனர்.

தற்போது சினிமா நன்றாக இருக்கிறது. காந்தாரா படம் கூட நல்ல வெற்றி பெற்றுள்ளது. இப்போது வந்துள்ள இளைஞர்கள் நல்ல படங்களை செய்து வருகின்றனர். நித்தம் ஒரு வானம், காந்தாரா, லவ் டுடே போன்ற படங்கள் பார்த்தேன். சிறப்பாக இருந்தது.
நிறைய பேர் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தால் லாபம் பெற்றுள்ளனர்' என்றார்.

இதையும் படிங்க:"சாதி ஒரு சாக்கடை" - புத்த மதத்தை தழுவிய நடிகர் தீனா பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details