தமிழ்நாடு

tamil nadu

ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன்... மீண்டும் இணையும் படையப்பா கூட்டணி

By

Published : Aug 24, 2022, 8:10 PM IST

ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் விவரத்தை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் படையப்பா படத்திற்குப் பின் முழுபடத்தில் ரம்யா கிருஷ்ணன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கின்றனர்.

ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன்...மீண்டும் இணையும் படையப்பா கூட்டணி
ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன்...மீண்டும் இணையும் படையப்பா கூட்டணி

சென்னை: பீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆக., 22ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, மலையாள நடிகர் விநாயகன் ஆகிய நடிகர்கள் நடிப்பதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

படையப்பா படத்திற்குப்பிறகு ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன் முழுப்படத்திலும் இணைந்து நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிக்கும் மலையாள நடிகர் விநாயகன், முன்னதாக தமிழில் திமிரு, மரியான் ஆகியப் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மீண்டும் தொடங்கியது ’இந்தியன் 2’ படப்பிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details