தமிழ்நாடு

tamil nadu

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022 - டீஸர் காணொலியை வெளியிட்ட ரஜினி!

By

Published : Jul 15, 2022, 9:56 PM IST

வருகிற 28ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கான இசைக் காணொலியின் டீஸரை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Rajini release 44th chess olympiad video
Rajini release 44th chess olympiad video

வருகிற 28ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறவுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இசைக் காணொலியின் டீஸரை, நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அதனுடன் சேர்த்து ஓர் செய்திக்குறிப்பையும் பதிவிட்டுள்ளார்.

அதில், “கரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும். 44ஆவது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல்முறையாக இந்தியாவில் அதுவும் நம் தமிழ்நாட்டில் நடைபெறவிருப்பது நமக்கெல்லாம் பெருமை.

அதனை எதிர்வரும் 28ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி ஜி தொடங்கி வைக்கவிருக்கிறார். போட்டி குறித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு வீடியோ தயாரித்துள்ளார்.

அதன் டீஸரை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022 - டீஸர் காணொலியை வெளியிட்ட ரஜினி!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தக் காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார். மேலும் இயக்குநர் சங்கரின் மகளான நடிகை அதிதி சங்கர் நடனமாடியுள்ளார். மேலும், இந்தக் காணொலிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: 'பிரதாப் போத்தனை பாலச்சந்தரிடம் அறிமுகம் செய்தேன்..!' - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details