தமிழ்நாடு

tamil nadu

பொங்கல் ரேஸில் இருந்து விலகிய 'லால் சலாம்' - புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 8:39 PM IST

Updated : Jan 9, 2024, 8:58 PM IST

Lal salaam release date announced: லால் சலாம் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

lal salaam release date announced
lal salaam release date announced

சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடித்த '3' படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். தற்போது இப்படம் பல்வேறு திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

3 படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடித்த 'வை ராஜா வை' என்ற படத்தையும், 'சினிமா வீரன்' என்ற ஆவணப்படத்தையும் இயக்கினார். இவர் தற்போது, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது இந்தியில் வெளியான 'கை போ சே' என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படம், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ஹார்ட் டிஸ்க்கில் (Hard Disk) இருந்து மாயமாகிவிட்டதாகவும், இதனால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்ற தகவல் வெளியானது.

மேலும், 'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்றும் கூறப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், இன்று (ஜன.09) இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 9ஆம் தேதி 'லால் சலாம்' திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தின் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில், 'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவித்திருப்பது ரஜினி ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்தாண்டு, ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வசூலைப் பெற்ற நிலையில், தற்போது, தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இந்த 'லால் சலாம்' திரைப்படமும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'வேட்டையன்' திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிரான்ஸ் புதிய பிரதமர் நியமனம்! திடீர் பிரதமர் மாற்றத்திற்கு என்ன காரணம்?

Last Updated :Jan 9, 2024, 8:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details