தமிழ்நாடு

tamil nadu

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 12:28 PM IST

Rajinikanth New Year Wishes: 2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Rajinikanth conveyed his New Year wishes to his fans
நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

சென்னை: இன்று ஆங்கில புத்தாண்டு 2024 உலகம் முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு சினிமா நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களை நேரில் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், இந்த வருடம் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்குத் தனது வீட்டின் முன்பு கூடியிருக்கும் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதை ரஜினிகாந்த் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெளியிட்டு தேதி இந்த மாத இறுதிக்குத் தள்ளி வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:தளபதி 68வது படம் அமெரிக்காவை அதிர வைத்த தனி ஒருவனின் கதையா 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'?..

ABOUT THE AUTHOR

...view details