தமிழ்நாடு

tamil nadu

தேசிய கொடியை ட்விட்டர் புரொஃபைல் பிக்சராக மாற்றிய ரஜினி!!

By

Published : Aug 11, 2022, 12:32 PM IST

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தின் புரொஃபைல் பிக்சராக மூவர்ண கொடியை மாற்றியுள்ளார்.

தேசிய கொடியை ட்விட்டர் புரொஃபைல் பிக்சராக மாற்றிய சூப்பர்ஸ்டார்!!
தேசிய கொடியை ட்விட்டர் புரொஃபைல் பிக்சராக மாற்றிய சூப்பர்ஸ்டார்!!

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தின்படி, ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மக்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் புரொஃபைல் பிக்சராக தேசியக் கொடி படத்தை வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பிரபலங்களும் பொதுமக்களும் தங்கள் சமூக வலைதள புரொபைல் பிக்சராக தேசிய கொடியை மாற்றி வருகின்றனர்.

தேசிய கொடியை ட்விட்டர் புரொஃபைல் பிக்சராக மாற்றிய சூப்பர்ஸ்டார்!!

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தின் புரொஃபைல் பிக்சராக மூவர்ண கொடியை மாற்றியுள்ளார். இந்திய சினிமாவில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கிறார்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த் தாங்கள் இருவரும் அரசியல் பேசியதாக கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இட்தையும் படிங்க: 'ஆளுநரிடம் அரசியல் பேசினேன், ஆனால்...' - ரஜினி

ABOUT THE AUTHOR

...view details