தமிழ்நாடு

tamil nadu

சந்திரமுகி 2 படத்திற்காக ரஜினியிடம் ஆசி பெற்ற லாரன்ஸ்!

By

Published : Jul 15, 2022, 4:22 PM IST

’சந்திரமுகி 2’ படத்திற்காக தன் மானசீக குருவான நடிகர் ரஜினிகாந்திடம் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆசி பெற்றார்.

சந்திரமுகி 2 படத்திற்காக ரஜினியிடம் ஆசிபெற்ற லாரன்ஸ்!
சந்திரமுகி 2 படத்திற்காக ரஜினியிடம் ஆசிபெற்ற லாரன்ஸ்!

லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் 'சந்திரமுகி 2' என்னும் புதிய பிரமாண்ட திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி.வாசு இயக்குகிறார்.

'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 15) மைசூரில் துவங்கியது. இதையொட்டி அதில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 'ஹாரர் திரில்லர்' ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ’மாவீரன்’னாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!!

ABOUT THE AUTHOR

...view details