தமிழ்நாடு

tamil nadu

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் "ஆர்யன்"

By

Published : Sep 4, 2022, 1:50 PM IST

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாக உள்ள க்ரைம் த்ரில்லர் படமான ஆர்யன் படத்தின் பூஜை நேற்று நடந்தது.

Etv Bharatவிஷ்ணு விஷால் நடிக்கும் ஆர்யன் படத்திற்கு பூஜை  - படக்குழுவினர் பங்கேற்பு
Etv Bharatவிஷ்ணு விஷால் நடிக்கும் ஆர்யன் படத்திற்கு பூஜை - படக்குழுவினர் பங்கேற்பு

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கும் படம் ஆர்யன். இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில் உருவாகும் க்ரைம் திரில்லர் திரைப்படமான “ஆர்யன்” படத்தின் பூஜை நேற்று (செப்-3) நடந்தது. படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். புதுமையான திரைக்கதையில், பரப்பரான திருப்பங்களுடன் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பு

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், கதாநாயகிகளாக நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், கதாநாயகி

இப்படத்தினை விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்) தயாரிக்கிறார். இப்படத்திற்கான ஒளிப்பதிவை விஷ்ணு சுபாஷ் செய்கிறார். சாம் CS இமையமைகககிறார்.

இதையும் படிங்க:எனது மனசாட்சி தான் எனக்கு அத்தாட்சி - பாக்யராஜ்

ABOUT THE AUTHOR

...view details