தமிழ்நாடு

tamil nadu

5 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘பத்து தல’ ட்ரைலர்

By

Published : Mar 19, 2023, 8:25 PM IST

சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள பத்து தல திரைப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

5 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘பத்து தல’ ட்ரைலர்!
5 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘பத்து தல’ ட்ரைலர்!

சென்னை:கன்னட இயக்குனர் நார்தன் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், மஃப்டி (Mufti). சிவராஜ் குமார், ஸ்ரீமுரளி, ஷான்வி ஸ்ரீவஸ்தா ஆகியோர் நடித்திருந்த இப்படம், ரசிகர்களிடையே பெருமளவு வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் இயக்கி உள்ளார்.

இவர் ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை ஆகிய திரைப்படங்களை இயக்கி இருந்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தில், சிம்பு, கெளதம் கார்த்திக், கெளதம் வாசுதேவ் மேனன், டீஜே அருணாச்சலம், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். முன்னதாக படத்தின் டீசர் வெளியானபோதே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. இதனிடையே நேற்று (மார்ச் 18) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து, பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இதில் சிம்பு பிளாக் கோட் - சூட் உடையுடனும், புதிய ஹேர் ஸ்டைல் உடனும் மாஸ் லுக்கில் வந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். மேலும் இவர் உடன் இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் வந்தனர். இந்த விழாவில் முக்கியமாக, சிம்புவின் தந்தையும் திரைப்படத் துறையில் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட டி.ராஜேந்தரும் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரைலர் நேற்று இரவு 10 மணிக்கு வெளியிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளை புகுத்தி ஏ.ஜி.ராவணனாக கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள சிம்புவின் பத்து தல ட்ரைலர், தற்போது யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

முன்னதாக நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், ‘லூசுப் பெண்ணே’ பாடலுக்கு சிம்பு நடனமாடி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல் விழா மேடையில் பேசிய சிம்பு, “என் தலைவன் வருவான் என நீங்கள் (ரசிகர்கள்) சொல்லிச் சொல்லி என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிற்க வைத்துள்ளீர்கள். இனிமேல் நீங்கள் சந்தோஷமாக இருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். நான் கஷ்டத்தில் இருக்கும்போது நீங்கள் செய்தது எல்லாம் போதும்.

இனி நான் என்ன செய்கிறேன் என்று மட்டும் பாருங்கள். இந்த முறை வேற மாதிரி வந்திருக்கிறேன். தமிழ் சினிமா பெருமை அடையும்படி நான் நிச்சயமாக நடந்து கொள்வேன்” என கூறியது ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை எழுப்பியது. இந்த திரைப்படம் வருகிற மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்களில் வெந்து தணிந்தது காடு கலவையான விமர்சனங்களையும், மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:’பத்து தல’ இசை வெளியீட்டு விழாவின் மிரட்டலான கிளிக்ஸ்..!

ABOUT THE AUTHOR

...view details