தமிழ்நாடு

tamil nadu

நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இரட்டை ஆண் குழந்தைகள்… ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

By

Published : Oct 9, 2022, 7:26 PM IST

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதுகுறித்து புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இரட்டை ஆண் குழந்தைகள்
நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இரட்டை ஆண் குழந்தைகள்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் முக்கியமான திரை பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இந்த திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இரட்டை ஆண் குழந்தைகள்

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்களது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். அதில் நயன்தாராவும் நானும் அம்மா, அப்பாவாகி விட்டோம். நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.

நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து நமக்கு 2 ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்காக வேண்டும் உயிர் மற்றும் உலகம் என்று பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இரட்டை ஆண் குழந்தைகள்

இதனைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க இருவருக்கும் திருமணம் நடந்து நான்கு மாதங்கள் தான் ஆகிறது அதற்குள் எப்படி குழந்தை என்று ஒரு சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

வாடகை தாய் மூலமாக இந்த குழந்தைகளைப் பெற்று எடுத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க:ஆரம்பிச்சாச்சு பிக்பாஸ் - போட்டியாளர்கள் விவரம்

ABOUT THE AUTHOR

...view details