தமிழ்நாடு

tamil nadu

’நட்சத்திரம் நகர்கிறது’ ட்ரெய்லர் வெளியானது...

By

Published : Aug 19, 2022, 3:15 PM IST

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

’நட்சத்திரம் நகர்கிறது’ ட்ரெய்லர் வெளியானது...
’நட்சத்திரம் நகர்கிறது’ ட்ரெய்லர் வெளியானது...

சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா, ஹரி, ஷபீர் , வினோத், மைம் கோபி உள்ளிட்டவர்களோடு புதுமுகங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

வித்தியாசமான கதைக்கருவில் வெவ்வேறு காதல் கதைகளைக் கொண்ட இந்தப் படத்தில் ‘LGBT' சமூகத்தினரைப் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது. யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்தப் படத்தினை தயாரிக்க இசையை இசையமைப்பாளர் டென்மா அமைத்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. காதலர்களை பற்றி இல்லாமல் காதலை பற்றி பேசும்படமாக இது இருக்கும் என்பதை ட்ரெய்லர் உறுதிபடுத்தியுள்ளது. இப்படம் இம்மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க: ஆர்ப்பரித்த ரசிகர்கள் கூட்டம்... தப்பித்து தெறித்து ஓடிய தனுஷ்...

ABOUT THE AUTHOR

...view details