தமிழ்நாடு

tamil nadu

போய் பொழப்ப பாருங்க.. த்ரிஷாட்ட தப்பான வீடியோவை காமிச்சிருக்காங்க - த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் பதில்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 10:28 AM IST

Mansoor Ali Khan: பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இல்லாததால் ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன் என த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் மன்சூர் அலிகான் பதிலளித்துள்ளார்.

த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் பதில்!
த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் பதில்!

சென்னை:தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி வில்லனாக இருந்து வருபவர், மன்சூர் அலிகான். சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா நடித்த லியோ படத்தில் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், த்ரிஷா பற்றி அருவறுக்கத்தக்க வகையில் பேசியிருந்தார். இதற்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்ததோடு, இவர் போன்ற ஆட்கள் மனித குலத்துக்கே அவப்பெயர் என்று சாடியிருந்தார். மேலும், பலரும் இவரது பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு நடிகர் மன்சூல் அலிகான் பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “'அய்யா பெரியோர்களே. திடீர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ற தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக.

உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன்.

அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா, நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா. திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க.

மேலும், லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய FAN ணுன்னு சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும் 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும். சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது. உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு… பொழப்ப பாருங்கப்பா….நன்றி! ”என்று தன் பாணியில் அறிக்கை வெளியிட்டு பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க:மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு - த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்பட திரைப்பிரபலங்கள் கடும் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details