தமிழ்நாடு

tamil nadu

'லியோ' வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 6:01 PM IST

Lokesh Kanagaraj visited Tirupati: லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த லோகேஷ் கனகராஜ்

திருப்பதி: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணையும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் லியோ படம் லோகேஷ் கனகராஜின் LCU யுனிவர்சில் இணையுமா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், படக்குழு தொடர்ச்சியாக அப்டேட்கள் வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் டிரெய்லர் வெளியானது. லியோ பட டிரெய்லர் தற்போது வரை 48 மில்லியன் பார்வையாளர்களுடன் டிரென்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில், லியோ படத்தின் மூன்றாவது சிங்கிள் ‘அன்பெனும்’ பாடல் நேற்று வெளியானது.

லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது அவருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் சூழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்கள் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 குறித்து கேட்ட போது, ”லியோ படம் வெளியான பிறகு அடுத்த படம் குறித்து பேசலாம்” என லோகேஷ் கூறிவிட்டு சென்றார். இது குறித்து லியோ படத்திற்கு வசனம் எழுதியுள்ள இயக்குநர் ரத்ன குமார் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரத்னகுமார் மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் திருப்பதியில் லோகேஷ் கனகராஜும், ரத்ன குமாரும் வேட்டி, சட்டையுடன் உள்ளனர். தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் பல பேர் தங்கள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு திருப்பதி கோயிலில் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: மதுரை விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை.. லியோ சிறப்பு காட்சி பெயரில் போலி டிக்கெட் விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details