தமிழ்நாடு

tamil nadu

Leo: லியோ படப்பிடிப்பு நிறைவு - லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி ட்வீட்!

By

Published : Jul 15, 2023, 11:11 AM IST

ஆறு மாதங்களாக நடைபெற்ற லியோ படபிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் ட்வீட்
lokesh kanagaraj tweet

சென்னை:இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களைtஹ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உருவெடுத்துள்ளார். இவர் தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ள படம், லியோ. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்த மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. கரோனா காலத்தில் வெளியானாலும் வசூல் வேட்டை நடத்தியது. லியோ படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறும்போது, “மாஸ்டர் எனது 50 சதவீதமாக இருந்தது. ஆனால், லியோ 100 சதவீதம் எனது படமாக இருக்கும்” என்றார். இது விஜய் ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருந்தது.

இதையும் படிங்க:ஒரு படத்தை வெளியிடுவது மன‌ உளைச்சலை தருகிறது - நடிகர் பரத் ஆதங்கம்!

இப்படம் எல்சியுவில் (Lokesh cinematic universe) இணையுமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதனால் லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இருந்து வெளியான ‘நா ரெடி தான் வரவா’ என்ற பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாடல் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரில் தொடங்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு அங்கு கடும் குளிரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, அதன் பிறகு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினர். சமீபத்தில் விஜய் தொடர்பான காட்சிகள் நிறைவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்றுடன் லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “6 மாதங்களில் 125 நாட்கள் படப்பிடிப்பு. இந்தப் படத்தில் தங்கள் முழு உழைப்பை ஈடுபடுத்திக் கொண்ட நடிகர்கள் மற்றும் படக் குழுவினருக்கு நன்றி.

இந்தப் பயணம் மீண்டும் என் இதயத்துக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் நெருக்கமானதாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மேலும், லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Maaveeran: மாவீரன் பட ரிலீஸ்.. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நெல்லையில் 80 அடி கட்டவுட்!

ABOUT THE AUTHOR

...view details