தமிழ்நாடு

tamil nadu

'ஜெயிலரை' தொடர்ந்து 'கேப்டன் மில்லரிலும்' இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார்!

By

Published : Dec 8, 2022, 7:43 PM IST

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார்
கன்னட சூப்பர் ஸ்டார்

பெரும் பாராட்டுகளைக் குவித்த 'ராக்கி' , 'சாணிகாயிதம்' படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்‌ தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாகும். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

மேலும் மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), T. ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (ஆக்ஷன்), ட்யூனி ஜான் 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர். ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்திலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.15இல் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details