தமிழ்நாடு

tamil nadu

ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் கமல்ஹாசன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 6:45 PM IST

gv prakash Kingston movie shooting: ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

கிங்ஸ்டன்
கிங்ஸ்டன்

சென்னை:அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'. இவருடன் திவ்யபாரதி, 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் ஷாபுமோன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

படத்தின் வசனங்களை திவிக் எழுத, படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்கிறார். கடல் பின்னணியில் திகில் சாகச படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜி. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் பேசுகையில், ''என்னை போன்ற புதுமுக இயக்குநருக்கு 'கிங்ஸ்டன்' போன்ற கனவு திரைக்கதையை எழுதி இயக்கும் வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல. இந்த படைப்பு குறித்த எனது பார்வையை புரிந்துக் கொண்டு முழுமையாக நம்பி வாய்ப்பு வழங்கியதற்காக ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகியோருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் ஆதரவுடன் இதனை சாத்தியமாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்'' என்றார்.

தயாரிப்பாளராக அறிமுகமாவது குறித்து ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், “தயாரிப்பாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்கான சரியான கதை அமைய வேண்டும். “கிங்ஸ்டன்” கதையைக் கேட்டவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை கிடைத்தது. உடனடியாக தயாரிக்க முடிவு செய்து, பணிகளைத் தொடங்கிவிட்டேன்.

எப்போதுமே ஒரு படத்துக்கு ஆரம்பப்புள்ளி என்பது மிகவும் முக்கியம். அப்படி எனது தயாரிப்பு நிறுவனத்தினைத் தொடங்கிவைத்து வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தினை என்னுடன் கைகோர்த்து தயாரிக்கவிருக்கும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கும் நன்றி. இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் எனக்கு உங்களுடைய அன்பும், ஆதரவும் தேவை” என்றார்.

'கிங்ஸ்டன்' திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்திய சினிமாவில் முதன்முதலாக கடல் பின்னணியில் திகில் சாகச படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜெய் நடிக்கும் 'லேபில்' வெப் தொடரின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details