தமிழ்நாடு

tamil nadu

Jailer update: வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்'!

By

Published : May 4, 2023, 7:22 PM IST

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில் ஆகியோர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் 'ஜெயிலர்'. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அதிக பொருட்செலவில் தயாராகும் ஜெயிலர் படத்தின் சூட்டிங் சென்னை, நெய்வேலி, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்டப் பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. ஆக்‌ஷன் படமாக உருவாகும் 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் ரஜினிகாந்துடன், பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரபல மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன் 'ஜெயிலர்' படப்பிடிப்பு முடிந்ததாக தனியார் நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன் கூறினார்.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் இந்த வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என ப்ரோமோ வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என அந்த படக்குழு அறிவித்த நிலையில், தற்போது ஜெயிலர் படக்குழுவின் இந்த அறிவிப்பு, சினிமா ரசிகர்களிடம் இரண்டு படமும் அறிவித்த படியே ரிலீசாகுமா அல்லது ஏதாவது ஒரு படம் பின் வாங்குமா என ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நெல்சன் திலீப்குமார் தன்னுடைய ஜெயிலர் படத்தின் கதை விவாதத்தில், சிவகார்த்திகேயனையும் சேர்த்துக்கொண்டு பணிபுரிந்ததாகவும், இக்கதை சிவகார்த்திகேயனின் தந்தை தாஸின் உண்மைக்கதை என்றும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. எது எப்படியோ, சிவகார்த்திகேயனே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' வெளியாகும் தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு!

ABOUT THE AUTHOR

...view details