தமிழ்நாடு

tamil nadu

ஜெயிலர் படத்தின் சிவராஜ் குமார், மோகன்லால் மிரட்டல் தீம் மியூசிக் வெளியீடு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 7:49 PM IST

ஜெயிலர் படத்தில் சிவராஜ் குமார், மோகன்லால் நடித்த காட்சிகளின் பின்னணி இசையை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat

சென்னை: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பு எதிர்பார்ப்பு சற்று குறைவாக இருந்தாலும் காவாலா, ஹுகும் ஆகிய பாடல்கள் வெளியான பின்பு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

படம் வெளியான போது ரஜினியை படத்தில் நெல்சன் மாஸாக காட்டியுள்ளார் என ரசிகர்கள் பாராட்டினர். படத்தின் இடைவெளி காட்சி, ஃபளாஷ்பேக், மற்றும் இறுதிக்காட்சி ஆகிய காட்சிகளசி தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடினர். இந்த படத்தில் ரஜினிகாந்த் அளவிற்கு சிவராஜ் குமார் வரும் காட்சிகளில் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவாரம் செய்தனர். ரஜினி அளவிற்கு சிவராஜ் குமாருக்கு screen presence உள்ளது எனவும், அவர் அதிக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன் ஆகியோருக்கு விலையுயர்ந்த சொகுசு கார் மற்றும் பரிசுத்தொகையும் வழங்கினார்.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு அனிருத் இசை முக்கிய காரணம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டினர். படம் வெளியானது முதல் படத்தில் சிவராஜ் குமாரின் பின்னணி இசை எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பிலிருந்தனர்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் இன்று அதிகாரப்பூர்வமாக சிவராஜ் குமார் (நரசிம்மா) நடித்த காட்சிகளின் பின்னணி இசை மற்றும் மோகன்லால் (மேத்யூ) நடித்த காட்சிகளின் பின்னணி இசையையும் வெளியிட்டுள்ளது. ஜெயிலர் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடிகர் மாரிமுத்து மறைவு; தேனி அருகே சொந்த ஊரில் உடல் தகனம்!

ABOUT THE AUTHOR

...view details