தமிழ்நாடு

tamil nadu

Indian 2: சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இந்தியன் தாத்தாவின் மிரட்டலான லுக்!!

By

Published : Aug 15, 2023, 8:08 PM IST

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரை சுதந்திர தினத்தை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

”#INDIAN2” என்ற ஹேஷ்டேக்குடன் இந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதேநேரம் படம் குறித்து எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை. இந்த போஸ்டரில் நடிகர் கமல்ஹாசனை அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவு சிறப்பாக மேக்கப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இந்தியன் தாத்தா கெட்டப்பில் ஆங்கிலேயர் காலத்து போலீஸ் காக்கி உடையில் சிறப்பாக போஸ் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

விக்ரம் பட வெற்றியை தொடர்து அடுத்த ஆண்டு இந்தியன் 2 படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது. ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில், ரகுல் ப்ரித் சிங், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தியன் 2 திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்து.

இந்தியன் படத்தில் கமல்ஹாசன், சேனாபதி கதாபாத்திரத்தில் சுதந்திர போராட்ட தியாகியாக, ஊழலுக்கு எதிராக போராடுபவராக நடித்து இருந்தார். மேலும் இந்தியன் 2படத்தில் துணை நடிகர்களாக காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், நெடுமுடி வேணு, சமுத்திரகனி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், மனோபாலா, வெண்ணிலா கிஷோர், தீபா ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தியன் 2 படத்திற்கு ரவி வர்மன் மற்றும் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளனர். செப்டம்பர் 2017ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்தியன் 2 படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார். இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் விபத்து, கரோனா தொற்று உள்ளிட்ட பல தடைகளை தாண்டி படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

மேலும் இந்தியன் படத்தின் 3ஆம் பாகமும் வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தற்போது இந்தியன் 2 மற்றும் ராம் சரண் நடிக்கும் கேம்சேஞ்சர் படத்தையும் ஒரே நேரத்தில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Jailer collection: வசூலை வாரிக்குவிக்கும் ஜெயிலர்; தியேட்டர்களை அதகளப்படுத்தும் ரசிகர்கள்!!

ABOUT THE AUTHOR

...view details