தமிழ்நாடு

tamil nadu

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிக்கும் 'ராமாயணம்' பட படப்பிடிப்பு விரைவில் துவக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 6:42 PM IST

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் நடிக்கவுள்ள ராமாயண புராண கதையின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.

ராமாயணம்
ராமாயணம்

ஹைதராபாத்: திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி ராமாயண புராணக் கதையைத் திரைப்படமாக எடுக்கவுள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள இந்த படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும், கேஜிஃப் புகழ் நடிகர் யாஷ் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் நிதேஷ் திவாரி அமீர்கான் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான ’தங்கல்’ திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். சமீபத்தில் பாலிவுட் வட்டாரத்தில் கிடைத்த தகவலின்படி, ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரும் ராமாயணம் படத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தில் கன்னட நடிகர் யாஷ் இணைந்திருப்பது மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. நடிகர் யாஷ் கேஜிஃப் திரைப்படத்திற்குப் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ராமாயணம் புராண கதையை இரண்டு பாகங்களாக எடுக்க இயக்குநர் நிதேஷ் திவாரி முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தில் ரன்பீர் கபூருக்கும் சாய் பல்லவிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அதே வேளையில், இரண்டாம் பாகத்தில் நடிகர் யாஷ் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆஸ்கர் விருது பெற்ற டிஎன்இஜி நிறுவனம் மூலம் இந்த ராமாயணம் திரைப்படத்தை ஏற்கனவே தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. ராமாயண திரைப்பட உலகத்தை உருவாக்கும் பணியில் திரைப்படக் குழு திவீரமாக பணியாற்றி வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் இந்த ராமாயண புராண கதையில் ரன்பீர் கபூர், அலியா பட், யாஷ் ஆகியோர் நடிப்பதாக இருந்த நிலையில், இந்த படத்திலிருந்து அலியா பட் விலகினார். சமீபத்தில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள animal படத்தில் டீசர் வெளியானது. இந்த படத்தில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இதையும் படிங்க: மும்பையில் சாமி தரிசனம் செய்த ராம்சரண்!

ABOUT THE AUTHOR

...view details