தமிழ்நாடு

tamil nadu

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு படமெடுக்கப் போகும் கௌதம் மேனன்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 8:48 PM IST

இந்தியா - நியுசிலாந்து இடையேயான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியின் தமிழ் வர்ணனையில் (Commentary) சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் கௌதம் மேனன், கிரிக்கெட்டை மையமாக கொண்டு ஒரு கதை எழுதுவதாக தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் படமெடுக்கும் இயக்குநர் கௌதம் வசுதேவ் மேனன்
கிரிக்கெட் படமெடுக்கும் இயக்குநர் கௌதம் வசுதேவ் மேனன்

சென்னை: தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளை மையமாக கொண்டு உருவாக்கும் படங்கள் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் இயக்குநர் கௌதம் வசுதேவ் மேனன். இவரது படங்களில் வரும் காதல் வாசனங்கள், படத்தின் காட்சிகளை இன்னும் அழகாக திரையில் காணச்செய்யும்.

குறிப்பாக, இவர் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் வரும் காதல் காட்சிகளும், அதில் வரும் வசனங்களும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவதை சமூக வலைத்தள பதிவுகளில் பார்க முடிகிறது.

மேலும், இவர் இயக்கும் ஆக்சன் படங்களும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் கௌதம் வசுதேவ் மேனன் முதல் முறையாக இணையும் படம் 'துருவ நட்சத்திரம்'. கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்டது. இப்படத்தில் சிம்ரன், ராதிகா, பார்த்திபன், ரிது வர்மா, திவ்யதர்ஷினி, விநாயகன், உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

நீண்ட காலமாக படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், சமீபத்தில் படத்தின் சில பாடல்களும், டிரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, 'துருவ நட்சத்திரம்' படத்தின் புரமோஷனுக்காக, இன்று (நவ.15) மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியின் தமிழ் வர்ணனையில் (Tamil Commentary) இயக்குநர் கௌதம் மேனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தனக்கு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உள்ளதாகவும், தனது மூன்று மகன்களும் நன்றாக கிரிக்கெட் விளையாடுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் தனது மகன் டிஎன்பிஎல் (TNPL) கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தனது படங்களில் கிரிக்கெட் தொடர்பான ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் என்று தெரிவித்த அவர், தான் கிரிக்கெட் மையமாக கொண்ட கதை ஒன்றை எழுதி வருவதாக தெரிவித்தார். இரண்டு தமிழக கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை பயணம் பற்றிய படமாக அது இருக்கும் என்றும், சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோரின் நட்பை போல இந்த படம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:54வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா.. திரையிடத் தயாராகும் முக்கிய திரைப்படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details