தமிழ்நாடு

tamil nadu

Etv Bharat Exclusive: ஜெய் பீம் 2 அப்டேட்?

By

Published : Nov 29, 2022, 5:21 PM IST

Updated : Nov 29, 2022, 5:47 PM IST

ஜெய் பீம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து 2D நிறுவனத்தின் சிஇஓ பிரத்யேக தகவலை ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்துள்ளார்.

Exclusive தகவல்: ஜெய் பீம் 2 எப்போது?
Exclusive தகவல்: ஜெய் பீம் 2 எப்போது?

சென்னை: இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி வெளியான ஜெய் பீம்(Jai Bhim) திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு ஆஸ்கார் படிகளையும் தொட்டது.

மேலும், சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளையும் ஜெய் பீம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிஇஓ ராஜசேகர் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு பிரத்யேக தகவலை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஜெய் பீம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. அதன் கதை குறித்து இயக்குனரிடம்தான் கேட்க வேண்டும். அடுத்து ஞானவேல் இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தின் பணிகள் நடந்து வருகின்றன. அதனைத்தொடர்ந்து ஜெய் பீம் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கும்” என்றார்.

இதையும் படிங்க:சர்ச்சையில் சிக்கிய வாரிசு.. விஜய் படங்கள் எதிர்கொண்ட தடைகள் ஒரு பார்வை..!

Last Updated :Nov 29, 2022, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details