தமிழ்நாடு

tamil nadu

Indian 2: தைவானில் இந்தியன் 2 படக்குழு; புதிய அப்டேட் வெளியீடு!

By

Published : Apr 7, 2023, 3:55 PM IST

ஷங்கர், கமல்ஹாசன் காம்போவில் உருவாகி வரும் இந்தியன் - 2 திரைப்படத்தின் தைவான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்றால் அது ஷங்கர் தான். இவரது இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம். மேலும் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை எதிர்த்து எடுக்கப்பட்ட இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் இந்தியன் தாத்தா வேடம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்பா மகன் என இரு வேடங்களிலும் கமல்ஹாசன் கலக்கி இருந்தார். ஏஆர் ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகைகளை கவர்ந்தது. கவுண்டமணி, செந்தில் காமெடி என ஒட்டுமொத்தமாக ஒரு கமர்ஷியல் பேக்கேஜ் ஆக இந்தியன் திரைப்படம் இருந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகின்றன. இயக்குனர் ஷங்கரே இதனை இயக்கி வருகிறார். இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தியன் 2 படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து கரோனா, படத்தின் பட்ஜெட் என தொடர் பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.

அதன் பிறகு அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. ஏற்கனவே லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தியன் 2(Indian 2) படத்தை தயாரித்து வந்த நிலையில், தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் கைகோர்த்துள்ளது. மீண்டும் இந்தியன் தாத்தா வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டில் சென்னையில் தொடங்கியது. சென்னை பிரசாத் லேபில் அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் படக்குழுவினர் அனைவரும் தைவான் சென்று படப்பிடிப்பு நடத்தினர். அங்கு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து படக்குழுவினர் உடனடியாக தென்னாப்பிரிக்கா செல்கின்றனர்.

அதனை தொடர்ந்து ஹைதராபாத், தனுஷ்கோடி, சென்னை என படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை உடனடியாக முடித்து வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இருவரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது. அப்படத்திற்கு கேம் சேஞ்சர்(game changer) என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளையராஜா இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்' படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details