தமிழ்நாடு

tamil nadu

தனுஷின் 'நானே வருவேன்' டீஸர் வரும் 15ஆம் தேதி ரிலீஸ்

By

Published : Sep 13, 2022, 8:02 PM IST

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'நானே வருவேன்' படத்தின் டீஸர் வரும் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.

தனுஷின் நானே வருவேன் டீசர் வரும் 15ஆம் தேதி ரிலீஸ்
தனுஷின் நானே வருவேன் டீசர் வரும் 15ஆம் தேதி ரிலீஸ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் தனது அண்ணனுடன் இணைந்திருக்கும் திரைப்படம் 'நானே வருவேன்'. இருவரும் 2011இல் ’மயக்கம் என்ன’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர். பின்பு இருவரும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் இணைவதாக போஸ்டர்கள் வெளியான நிலையில் அப்படத்தின் பணிகள் தாமதமானது.

இந்த நிலையில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் - செல்வராகவன் மீண்டும் இணைந்திருக்கின்றனர். இப்படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இம்மாதம் திரைக்கு வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் கூட்டுவதற்காக வரும் 15ஆம் தேதி படத்தின் டீஸர் வெளியிடப்பட உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details