தமிழ்நாடு

tamil nadu

தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்: வெளியானது 'வாத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் - நாளை டீஸர் ரிலீஸ்!

By

Published : Jul 27, 2022, 3:29 PM IST

நடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 'வாத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்: வெளியானது வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் - நாளை டீசர் ரிலீஸ்!
தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்: வெளியானது வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் - நாளை டீசர் ரிலீஸ்!

சென்னை:டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம், வாத்தி. தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, பிரவீணா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வரும் இப்படத்தின் டைட்டில் லுக் வெளியானபோதே, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக்

இந்நிலையில் நாளை தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 'வாத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக்கில் இருக்கும் தனுஷின் லுக், ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், நாளை (ஜூலை 28) மாலை 6 மணிக்கு ’வாத்தி’ படத்தின் டீஸர் காட்சிகள், தனுஷின் பிறந்தநாள் பரிசாக வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி கூறுகையில், “இந்தப் படத்தில் தனுஷ் ஒரு விரிவுரையாளராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படம், கல்வி அமைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தனுஷின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே நம்பமுடியாத ஒன்று.

வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக்

ஜி.வி.பிரகாஷின் இசை மற்றும் யுவராஜின் ஒளிப்பதிவு இரண்டுமே இந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சங்களாக அமையும்” எனக்கூறினார். விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருச்சியில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்

ABOUT THE AUTHOR

...view details