தமிழ்நாடு

tamil nadu

'கலகத் தலைவன்' படம் பார்த்து மகனை வாழ்த்திய முதலமைச்சர்!

By

Published : Nov 17, 2022, 8:49 PM IST

நடிகரும் தனது மகனுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கலகத் தலைவன்’ திரைப்படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்த்து வாழ்த்தியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் “கலகத் தலைவன்” படம் பார்த்து வாழ்த்திய முதலமைச்சர்!
உதயநிதி ஸ்டாலினின் “கலகத் தலைவன்” படம் பார்த்து வாழ்த்திய முதலமைச்சர்!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படம் உலகமெங்கும் நாளை வெளியாகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று(நவ.16) கண்டுகளித்தார்.

படத்தைப் பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக “கலகத் தலைவன்” படத்தின் நாயகனும் தனது புதல்வனுமான உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நாளை நவம்பர் 18ஆம் முதல் உலகமெங்குமுள்ள ரசிகர்களை மகிழ்விக்க ரிலீஸாகிறது, ‘கலகத் தலைவன்’.

இதையும் படிங்க :தனுஷின் வாத்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details